சிறந்த மொழி எது?

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

உலகில்

தலைசிறந்த மொழி எது?

கண்ணியமிக்க என் தோழர்களே அன்புச் சகோதர சகோதரிகளே!

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிகழட்டுமாக!

கொள்கையின் அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம் எனது பணி சமதர்ம சமுதாயத்தில் இஸ்லாம் என்னும் சமாதானத்தை எத்திவைத்து சமூக நல்லிணகத்தை ஏற்படுத்துவதே! என் உள்ளத்தில் உள்ளதை என் இறைவன் அறிவான் அவன் தெளிவான ஞானமுள்ளவன் அருளாளன் என் உள்ளத்தில் உதிக்கும் கருத்துக்களை உங்கள் உள்ளத்தில் சேர்ப்பிப்பவன், புகழுக்குரியவன்!

மொழியைப் பற்றி சற்று விரிவாக எழுதுகிறேன் எனவே சற்று அமைதியாக பொருமையாக படித்து நல்லுணர்வு பெற முயற்சிப்பீராக! உங்களுக்கு தெளிவான பார்வை கிடைக்க வல்ல ரஹ்மானை பிரார்த்திப்பவனாக ஆரம்பிக்கிறேன்!

மொழி என்பது என்ன? மொழி எதற்காக பிறந்தது?

மொழி என்பது மனிதனுக்கு அருளாக உள்ளது! ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள துணையாக நிற்பது மொழியாகும்! மொழி ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாகும், மொழி இன்றி அமையாது உலகு என்பதன் மூலம் மொழியின் அருமையை இதோ உங்களுக்கு விளக்கமாக விவரிக்கிறோம்!

என் உள்ளத்தில் உள்ளதை மொழியால் மட்டுமே உங்களுக்கு விளக்க இயலும் இந்த அடிப்படையில் இந்தக் கட்டுரையும் இதில் உள்ள கருத்துக்களும் உங்களுக்கு ஓர் உதாரணமாகும்!

உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன அத்தனை மொழிகளும் அவனவனுக்கு அழகாக இருக்கும்!

மொழி எத்தனை வகைப்படும்!

நாம் இங்கு கேட்கும் கேள்வி மொழி எத்தனை வகைப்படும் என்பதே! உடனே உங்கள் உதடுகளில் உதிப்பது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, மலையாளம் என்பதாகத்தான் இருக்கும் ஏனெனில் நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் சிந்திப்பவர்களாக இருக்கிறீர்கள் மாறாக பரந்த சிந்தனையுள்ளவராக மாறினால் மட்டுமே மொழியின் மகத்துவம் புரியும் இதோ நாம் உங்கள் குறுகிய வட்டத்தை தகர்த்து பரந்த சிந்தனையாளராக உருவாக்க முயற்சிக்கிறோம் இஸ்லாத்தின் பார்வையில் மொழி அறிவை கற்றுத்தருகிறோம்!

) இறைவனின் மொழி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் மனிதனைப் படைப்பதற்கு முன்னரே மொழியைப் படைத்துவிட்டான் அதற்கு எண்ணற்ற சான்றுகள் அருள்மறைக் குர்ஆனில் கொடுத்துள்ளான் இதோ சற்று கவனமாக படியுங்கள்!

கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து  நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக! (அருள்மறை குர்ஆன் 15:28)

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் முதல் மனிதராக ஆதிபிதா ஆதாம் என்னும் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் ஆனால் அந்த முதல் மனிதருக்கு முன்னரே வானவர்கள் எனப்படும் மலக்குமார்கள் மற்றும்  இப்லீஸ் என்னும் ஷைத்தானும் படைக்கப்பட்டான். இந்த படைப்பினங்களிடம் இறைவன் தெளிவாக அழகாக உறையாடியும் உள்ளான் இதுதான் மேற்கண்ட திருக்குர்ஆன் 15:28 வசனம் சாட்சியாக நிற்கிறது!

மனிதனைப் படைப்பதற்கு முன்னரே வானவர்கள் மற்றும் ஷைத்தானிடம் அல்லாஹ் பேசியிருக்கிறான் என்ற செய்தியை திருக்குர்ஆன் 15:28 வசனத்தின் மூலமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்ட அறிவுறுத்துகிறான் என்பதிலிருந்து மொழியானது மனிதனுக்கு முன் தோன்றியதாக ஆகிவிட்டது இந்த மொழி தேவனின் மொழி அதாவது இறைவன் அல்லாஹ்வின் மொழியாகும் இதற்கு நிகர் எந்த மொழியும் இல்லை என்பதாக அடித்துக் கூறுகிறோம்! இதன் மூலம் உலக மொழிகளின் பாரம்பரிய பெருமைகள் அனைத்தையும் தகா்த்துவிட்டோம்! அல்லாஹூ அக்பர்!

மேற்கண்ட விளக்கத்தை படித்தவுடன் சுள்ளென்ற கோபத்துடன் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் அத்துடன் கீழ்கண்ட இரு கேள்விகளும் மனதில் எழும் என்பதையும் நாம் உணர்கிறோம்!

  • இறைவனின் மொழியை நாம் எவ்வாறு அறிந்துக் கொள்வது?
  • நாம் அந்த மொழியை எப்படி பேசுவது?

கவலைப்பட வேண்டாம் உங்கள் இறைவனின் மொழியை எளிதாக அறிய முடியும் அந்த மொழிக்கு எந்த ஆசிரியரோ! இலக்கண இலக்கியங்களோ அல்லது கோனார் உரை நூலோ தேவையில்லை!

இறைவனின் மொழி மிக சுலபமானது மிக அழகானது இதைப்பற்றி தெளிவாக விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் ஆனால் இம் மொழியின் ரகசியத்தை நாம் இக்கட்டுரையின் இறுதியில் பதிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும் என்பதாக கருதுகிறோம்! எனவேதான் அல்லாஹ்வின் மொழி பற்றிய ரகசியத்தை இறுதியில் விளக்க உள்ளோம்! கட்டுரையில் சுவாரஸ்யம் வந்துவிட்டதா? வாருங்கள் மொழிகளை ஆராய்வோம்!

) மழலையின் மொழி

உங்கள் அன்புத் தாய் சிரமத்துடன் சிரமமாக உங்களை 10 மாதம் வயிற்றில் கருவாக சுமந்து ஒருநாள் பிரசவிக்கிறாள். நீங்கள் உலகில் பிறந்தவுடன் குவா குவா என்று அழுகிறீர்கள் இது உங்கள் முதல் மொழியாகும் இதற்குப் பெயர்தான் மழலை மொழியாகும். சிந்திக்கமாட்டீர்களே!

குழந்தை பிறந்தவுடன் தமக்கு ஏற்பட்டுள்ள பசியை தன் தாய்க்கு உணர்த்த குழந்தை அழுகிறது உடனே அக்குழந்தையின் தாய் குழந்தையின் பசியினைப் போக்க தன் மார்பகங்களுடன் அக்குழந்தையை அழகாக அணைத்து தாய்ப்பால் புகட்டுகிறாள். தாய்மை என்னும் பெண்மை உணர்ந்த மொழியாக மழலை மொழி அமைகிறது இந்த மொழியின் அதிசயத்தை உங்களைப் போன்ற ஆணவக்காரர்களுக்கு எங்கே புரியப் போகிறது! மழலையின் மொழி அறியாதவன் மூடனாகிறான் சிந்தித்துணர மறுக்கிறான்!

) மனிதனின் மொழி

குழந்தை வளரத் தொடங்கியவுடன் தாயிடம் பேச ஆரம்பிக்கிறான் அந்த தாய் என்னும் பெண்மை அதனிடம் கொஞ்சி மகிழ்கிறது பின்னர் அவன் சார்ந்த இடத்தின் கல்வியை கற்க முற்படுகிறான் இங்கு நாம் ஆரம்பப் பாடம் பயில்வதோ சுந்தரத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளாகும்!

தமிழைத் தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை பாட மொழியாகவும் கற்றுத் தேர்ந்த அவன் தேசிய மொழியாகிய ஹிந்தியை கற்க ஆரம்பிக்கிறான் இதன் மூலம் தமிழ் பேசக்கூடியவன் வடநாட்டில் ஹிந்தி மொழியையும் அயல்நாட்டில் ஆங்கிலத்தையும் சரளமாகப் பேசி தனது தேவைகளை பிறரிடம் தெரியப்படுத்துகிறான்! இது மனித மொழியின் சிறப்பம்சமாகும்! இதோ அல்லாஹ் அழகாக திருக்குர்ஆனில் அறிவிக்கிறான்!

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:22)

மேலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியதாக இறைவன் கூறுகிறான் அந்தந்த சமுதாயத்தவர்களிலிருந்து இறைத்தூதர்களை அனுப்பியதாகவும் அவரவர் தாய்மொழியில் வேதங்களை கொடுத்ததாகவும் சாட்சி கூறுகிறான் எனவே இதன் மூலம் மனிதன் மொழிகளில் சிதைந்துவிடக்கூடாது என்ற படிப்பினை தெளிவாகிறது! இதோ ஆதாரம்!

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 14:4)

) மாற்றுத்திறனாளி ஊமைகள் செவிடர்கள் மொழி

அல்லாஹ் ரஹ்மத்துல் ஆலமீன் என்று புகழத் தகுந்தவன் என்பதற்கு இந்த மொழியும் ஒரு சான்றாகும். மனிதனாகப் பிறந்தவன் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை பிறரிடம் தெளிவாக தெரிவிக்க ஒரு மொழியை கொடுத்துள்ளான் அதுதான் வாய்பேச முடியாதவர்களின் சைகை மொழியாகும் இதோ இந்த மொழிகளை உங்களால் உணர முடியவில்லையா?

  • French Sign Language
  • American Sign Language
  • Russian Sign Language
  • Czech Sign Language
  • Danish Sign Language
  • Swedish Sign Language
  • German Sign Language
  • Vietnamese sign languages
  • Arab sign-language
  • Indo-Pakistani Sign Language
  • Chinese Sign Language
  • Japanese Sign Language
  • BANZSL (British, Australian and New Zealand Sign Language)
  • South African Sign Language
  • Isolated languages

) மாற்றுத்திறனாளிகளான குருடனின் மொழி

என் இறைவன் அல்லாஹ் மிக அழகானவன் அவன் அழகையே விரும்புகிறான் சிந்தித்துப்பாருங்கள் பார்வையுள்ள குருடர்களே அல்லாஹ் கண்பார்வையற்ற மாற்றுத் திரணாளிகளுக்கும் அவர்களின் சொற்களை பேசுவதற்கு மொழியைக் கொடுத்தது போன்று அந்த மொழிக்கான எழுத்துக்களையும் மிக அழகாக உருவாக்கியுள்ளான் அந்த மொழியின் பெயர்தான் Braille.

இந்த மொழியின் எழுத்துக்கள் புள்ளிக் கோளங்கள் போன்று இருக்கும் 180 எழுத்துக்களின் வடிவங்களை பெற்றுள்ளது. சிந்திக்க மாட்டீர்களா?

) பறவையின் மொழி

படைத்த இறைவன் கண்ணியமானவன் அவன் தனது படைப்பினங்களை ஒழுங்காக படைத்து அவைகளுக்கே உரிய முறையில் கண்ணியம் அளித்துள்ளான் மனிதனுக்கு மட்டும் மொழியைக் கொடுத்து கண்ணியப் படுத்தினானா?

பறவைகளுக்கும் அல்லாஹ் மொழியை கொடுத்துள்ளான் இதோ மறைவான ஞானத்தில் உள்ள பறவை மொழியைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறை குர்ஆனில் அழகாக தெளிவாக விவரிக்கிறான்!

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்என்று அவர் கூறினார். (அருள்மறை குர்ஆன் 27:16)

மேற்கண்ட பறவையின் மொழியைப் பற்றி அருள்மறை குர்ஆன் மட்டுமல்ல பைபிள் மற்றும் தவ்ராத் வேதங்கள் உண்மைப்படுத்தின. கிருஸ்தவர்கள் நபி தாவூது (அலை) அவர்களை தாவீது என்றும் நபி ஸுலைமான் (அலை) அவர்களை தீர்க்கதரிசி சாலமோன் என்றும் அழைப்பதுண்டு!

ஊ) எறும்பின் மொழி

அன்பிற்கினியவர்களே எறும்புகள் பேசுகின்றன அவைகளுக்கும் மொழி உள்ளது இந்த மொழி பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் இன்றைக்கு கண்டுபிடித்துள்ளனர் இதோ மொழிபெயர்க்காமல் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறோம்!

Do Ants Speak to Each Other? Yes!

Another peculiar way of how ants communicate is by sound. A majority of ant species use it to communicate, although it is commonly unknown to most people because of its low resonance. The ants can procure different sounds by scraping their legs on a washboard-like part of their body, thus accomplishing different sounds. Although we may not hear it, other ants can. The sound is actually possible for us to perceive if we hold an ant very close to the ear, listening carefully.

The sounds are used in different ways, depending on the species. A great example of the use of sound is when a worker ant has been trapped somewhere.  Maybe through the collapse of a tunnel or chamber – blocking all the exits. The ant can use sound as a distress call, signaling their location to the other workers through the walls. This could not be achieved by pheromones.

12 Different Categories of Communication

Myrmecologists have mapped out twelve different categories of how ants communicate.

  1. Alert/Warn
  2. Entice
  3. Recruit (to food sources or new nest locations)
  4. Grooming (the cleaning and tending to other ants)
  5. Trophallaxis (the exchange of liquids, orally/anally)
  6. Exchange of solid food
  7. Peer pressure
  8. Recognition (members of the colony, determine caste, telling apart dead or living ants)
  9. Influencing castes (stimulating or preventing the development of different castes)
  10. Controlling rivals (other fertile females of the same nest)
  11. Marking territories (distance to the colony, marking of territorial borders)
  12. Sexual communication (determining species and genders as well as synchronising the nuptial flight)

(Thanks: Source:https://www.antkeepers.com/facts/ants/communication/)

மேற்கண்ட அறிவியல் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருள்மறை குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதோ கீழ்கண்ட இரண்டு மாபெரும் ஆதாரங்களை முன்வைக்கிறோம் இதோ அல்லாஹ்வின் வார்த்தைகள்!

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. (திருக்குர்ஆன் 27:18)

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!என்றார். (திருக்குர்ஆன் 27:19)

 

உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே இன்று உலகில் மனிதனால் பேசப்படும் மொழிகள் எத்தனை தெரியுமா?

  • உலக மொழிகள் 7099 ஆகும்!
  • இதில் 32 சதவீத மொழிகள் ஆசிய கண்டத்தில் உள்ளது!
  • உலகத்தில் முன்னிலையில் உள்ள மொழிகள் 26 ஆகும்!
  • உலக மொழிகளில் தமிழ் 21ம் இடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது!

மக்கள் தொகையின் அடிப்படையில் ஆதாரம் இதோ!

Rank Language Total
1 Mandarin Chinese 1.09 billion
2 English 983 million
3 Hindustani (Hindi/Urdu) 544 million
4 Spanish 527 million
5 Arabic 422 million
6 Malay 281 million
7 Russian 267 million
8 Bengali 261 million
9 Portuguese 229 million
10 French 229 million
11 Hausa 150 million
12 Punjabi 148 million
13 German 129 million
14 Japanese 129 million
15 Persian 121 million
16 Swahili 107 million
17 Telugu 92 million
18 Javanese 84 million
19 Wu Chinese 80 million
20 Korean 77 million
21 Tamil 75 million
22 Marathi 74 million
23 Yue Chinese 72 million
24 Turkish 71 million
25 Vietnamese 68 million
26 Italian 66 million
  • 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது
  • 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது

 

இந்திய மொழிகள் எத்தனை?

1866ல் வியன்னாவில் கீழ்த்திசை மாநாடு (Oriental Congress) கூடியது. 1881இல் நடந்த முதல் குடி மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் இத்தகவல்களும் திரட்டப்பட்டன. அது இந்திய மொழிகளின் கள ஆய்வுத் திட்டம் (Linguistic Survey of India) என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அது 1898இல் தொடங்கப்பட்டது.

29 ஆண்டுகள் கள ஆய்வு நடந்தது. சர். ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (Sir George Abraham Grierson) என்பவர் இத்திட்டத்தின் இயக்குநர். இதன் அறிக்கை 1927இல் வெளியானது. அவ்வறிக்கையில் அன்றைய இந்தியாவில் 1595 மொழிகள் வழங்கியமை பற்றிய தகவல்கள் தரப்பட்டிருந்தன.

தற்போதைய ஆய்வுப்படி இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொழியின் பெயரால் பிரச்சினை ஏன்?

மனிதன் மிக அதிபுத்திசாலியாக உள்ளான் அவன் சாதிச் சண்டைகள் மதச் சண்டைகள் நிகழ்த்திக் கொண்டு தங்கள் குலம் உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டிருந்தான் எனவே இந்த சாதிய வேற்றுமைகளை களைய தீண்டாமை வன்கொடுமை சட்டம் இயற்றப்பட்டது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதும் சாதிய அரசியல்வாதிகள் தங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையை உணர்ந்தார்கள் இச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டால் கட்சி அங்கீகாரமும், கைது நடவடிக்கைகளும் சாட்டப்படும் என்று பயந்தார்கள் எனவே மக்களை சீண்டிவிட்டு கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மாற்று வழி கண்டுபிடித்தார்கள் அதுதான் மொழி அரசியல்! இப்படிப்பட்ட அரசியல் வியாபாரிகள் முன்வைத்ததுதான் மொழி எதிர்ப்பு போராட்டங்கள்!

சிந்தித்துப் பாருங்கள் தமிழ் பேசக்கூடிய மக்களிடம் இந்தி மொழியை கொண்டு வந்தார்கள் அதை ஏற்க மறுத்து மொழிப் போராட்டங்கள் ஆங்காங்கே அரங்கேறின ஆனால் சாதிய மொழி அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை கான்வென்டுகளில் படிக்கவைத்து இந்தியை அழகாக கற்றுத் தந்தார்கள் ஆனால் அவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் இந்தி கற்றுக் கொள்ளாத  தமிழன் இன்று கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் தமிழ் பேசுவதால் கொடுமைப்படுத்தப்படுகிறான்!

அன்றைக்கே இந்தியை ஆதரித்திருந்தால் இன்று கர்நாடகத்தில் இந்தி பேசி தமிழன் சுதந்திரமாக சுற்றித் திரிந்திருக்கலாமே இந்த பாவத்திற்கு யார் காரணம் சிந்திக்க மாட்டீர்களா?

அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய அந்த அரசியல்வாதிகளைத் தொடர்ந்து இன்று தமிழ் திணிப்பு போராட்டம் என்று தமிழன் தமிழ் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள் சில அரசியல் நாட்டாமைகள் இவர்களின் செயல்களால் தமிழ் மொழியின் அருமை சீர்குலைந்து காணப்படுகிறது!

வள்ளுவன், ஔவையார் அகத்தியர், கம்பர், சேக்கிழார், சீத்தலை சாத்தனார் போன்ற புலவர் பெருமக்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ் மொழியின் கண்ணியத்தை சில சாதிய மொழி அரசியல் அரக்கா்கள் கிருக்கர்கள் தமிழ் மொழியை காப்பாற்றுவதாக கர்ஜித்துக் கொண்டு தமிழ் மொழியினை அழிக்க முற்பட்டுவிட்டார்கள் தமிழ்ச் சான்றோர்கள் இதை உணர்ந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டால் தமிழ் மொழி யுக முடிவு நாள்வரை நிலைத்து நிற்கும் இல்லையேல் சுவாஹாதான்!

ஒரு மொழிக்கு சிறப்பு என்பது அது பயணித்து வந்த பாதையையோ அல்லது அதன் தொன்மையையோ வைத்து எடைபோடக்கூடாது உதாரணமாக தமிழ் 5000 ஆண்டு பழமைவாய்ந்த மொழி என்று பெருமைப்படுகிறான் மனிதன் ஆனால் அதனால் அந்த மொழிக்கு பெருமை கிடையாது அப்படி உண்மையில் 5000 ஆண்டுகள் தொன்மையான மொழியாக தமிழ் மொழி இருந்திருந்தால் இன்று உலகத்தின் முதல் மொழியாக 75 சதவீத மக்கள் பேசக்கூடிய மொழியாக அது இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி ஒன்றும் இல்லை! இது பொய் என்பதற்கு அவர்களின் 5000ம் ஆண்டு தொன்மை என்கிற வாதம் ஆதாரமாக உள்ளது!

அரபு மொழியும் அதன் சிறப்பும்

படைத்த இறைவன் அல்லாஹ் முஹம்மது என்கிற அரபு மொழி பேசக்கூடிய மனிதரை தனது இறுதித் தூதராக நியமித்து அவரை நபியாக்கி அவரின் தாய்மொழியில் இறுதி வேதம் அருள்மறை குர்ஆனை அருளினான் இதனால்தான் அரபு மொழி சிறப்பு பெற்றது! இந்த சிறப்பு தமிழ் மொழிக்கோ அல்லது அரபு மொழி அல்லாத பிற மொழிகளுக்கோ கிடையாது எனவேதான் அரபு மொழியை சிறப்பு பெற்றதாக அறிவிக்கிறோம்!

உலக மொழிகளிலேயே அழகான தெளிவான மொழி அரபு மொழியாகும் இதை நாம் கூறவில்லை மாறாக படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் கூறுகிறான்! இதோ ஆதாரம்!

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (திருக்குர்ஆன் 26:193, 194, 195)

(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். என் மீளுதலும் அவனிடமே உள்ளதுஎன்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 13:36)

அருள்மறை குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை முஸ்லிம்கள் ஆங்காங்கே திணித்திருந்தால்

  • உலக மக்கள் தொகையில் 50% மக்கள் அரபு மொழி பேசுபவர்களாகவே இருந்திப்பார்கள்!
  • உலக மொழிகளில் பாதி மொழிகள் காணாமல் போயிருக்கும்!
  • உங்கள் தமிழ் மொழி சுவடுகள் தெரியாமல் சிதைந்திருக்கும்

இன்று வாய்கிழிய முஸ்லிம் மன்னர்களை நோக்கி கொள்ளையடிக்க வந்தார்கள் கூறுபோட வந்தார்கள் என்று கூறும் மாற்றுமதத்தவர்களின் வாதம் பொய் என்பதற்கு இந்த அரபு மொழியும் சான்றாக அமைகிறது.

ஏனெனில் முஸ்லிம் மன்னர்கள் பாரசீக அரபு மொழி அறிந்த இலக்கிய நயம் மிக்க மன்னர்கள் பாபர் நாமா போன்ற நூல்கள் இதற்கு ஆதாரம் முஸ்லிம் மன்னர்கள் ஒருவேளை கொள்ளையடிக்க வந்திருந்தால் தங்களின் புனிதமான அரபு மொழியை அந்தந்த பகுதி மக்களிடம் தினித்து அக்காலத்து மக்களை அரபிகளாக ஆக்கி கொடுமை புரிந்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவே முஸ்லிம் மன்னர்கள் கொள்ளையடிக்க வந்தார்கள் என்கிற வாதம் அடியோடு பொய் என்று இன்று நிறுபிக்கப்பட்டுவிட்டது! இந்த உண்மை வெளி உலகிற்கு தெரியப்படுத்த மொழி பற்றி சிந்திக்க காரணமாக அமைந்த ச்சீமானுக்கும் அவனது தம்பிகளுக்கும் நன்றி!

மொழியின் கண்ணியம் காத்த முஸ்லிம்கள்

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் அரபு மொழியில் இருந்தாலும் உலக முஸ்லிம்கள் அரபு மொழியை தாய்மொழியாக ஏற்றதும் இல்லை அவ்வாறு அரபு மொழியில் அனைத்து பகுதியிலும் பேசி வாழ்வதும் இல்லை இது அருள்மறை குர்ஆன் ஓர் அற்புதம் என்பதற்கு சான்றாக உள்ளது! இதையாவது சிந்திக்கமாட்டீர்களா?

“ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” (நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி 4981,7274)

அச்சமூட்டி எச்சரிக்கிறோம்!

நாம் மொழி திணிப்பை எதிர்த்து கருத்து பதித்தால் அண்ணன் ச்சீமானின் அலப்பறைகள் மிரட்டல் விடுக்கிறார்கள் அந்தோ பரிதாபம் நாம் அல்லாஹ்வின் அடிமை அப்துல்லாஹ் என்பதை அந்த அலப்பறைகள் சிந்திக்கவில்லை!

புதிய அரசியல் நாட்டாமையின் அலப்பறைகளே நாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி அடிபணியும் மனிதர்கள் எங்கள் சமுதாயம் உங்கள் 5000 ஆண்டு தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு முன் பிறந்த நபி மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்ற மன்னனையே எதிர்த்து நின்றவர்கள் இந்த அரசியல் நாட்டாமைகள் அந்த ஃபிர்அவ்னின் கால் தூசிக்கு சமமாவார்களா?

எத்தனையோ இறைத்தூதா்கள் நல்லடியார்கள் உண்மையை ஏவியதன் காரணமாக ஷஹீதாக்கப்பட்டார்கள் அப்படிப்பட்ட ஷஹீதுகளின் அந்தஸ்தை விரும்பக்கூடியவர்களாக நாம் இருக்கிறோம் உங்களால் எங்கள் முடியைக்கூட புடுங்க முடியாது என் இறைவன் நாடினால்தவிர! நயவஞ்சகர்களே இறைவனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை உணர்வீர்களா? இதோ சற்று படித்துப் பாருங்கள்!

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 4:93)

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணைகற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. (திருக்குர்ஆன் 48:6)

தமிழ்சான்றோர்களின் பார்வைக்கு கவனத்திற்கு

ஒவ்வொருவரும் மொழியைப் பற்றி தர்க்கம் செய்தால் எவ்வாறு இருக்கும் சிந்திப்போமா?

  • உலக மொழிகள் 7099
  • இந்தியாவில் உள்ள மொழிகள் 3,372
  • தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் 43% பேர்

சிந்தித்துப்பாருங்கள்! தோழர்களே!

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசக்கூடியவர்களின் எண்ணிக்கை 89.43%மாக இருக்கும் போது எதற்கு வீண் பகட்டுமேனிக்கு தற்பெருமை கொண்டு ஆணவம் கொண்டு தமிழ், தமிழன் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதி, சமய மக்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்!

  • கிருஸ்தவர்கள் தமிழில்தான் ஜெபம் செய்கிறார்கள்
  • முஸ்லிம்கள் தமிழில்தான் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள்

ஒருவருக்கொருவர் மொழியை முன்வைத்து வாதிட்டால்

  • உலக அளவில் 7099 மொழி பேசக்கூடிய கேடுகெட்ட அரசியல் காமுகர்கள் தோன்றுவார்கள்!
  • இந்தியாவில் உள்ள 3372 மொழிப் பேசக்கூடிய கேடுகெட்ட அரசியல்வாதிகள் தோன்றுவார்கள்!
  • ஒருவருக்கொருவர் மொழியை முன்வைத்தால் வியாபாரம் செய்ய இயலாது!
  • சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக வாழ இயலாது
  • சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக படிக்க இயலாது
  • மொழிப் போர் மொழியினை அழித்துவிடும்

தீன்குல மூடர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கிறோம்

அல்லாஹ் அருளிய மார்க்கத்தை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் தாவா செய்தால் நாங்கள் எங்கள் அரசியல் தமிழ் தலைவர்களைத்தான் பின்பற்றுவோம் என்று முடக்குவாத முற்போக்கு சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள் அதுமட்டுமின்றி முஸ்லிம் என்று தன்னை அறிவித்துக் கொள்ளுங்கள் என்ற அழகிய அறிவுரை கூறினால் நான் தமிழன் பிறகுதான் முஸ்லிம் என்று கூப்பாடு போடுகிறார்கள் மேலும் என்னை முஸ்லிம் என்று நான் அறிவித்துக் கொண்டால் அல்லாஹ்வின் சாபம் உன் மீது இறங்கட்டும் என்று கேடுகெட்ட வாய்களால் சபிக்கிறார்கள் இது மக்கள் அறிந்ததே!

அட தீன்குல மூடர்களே! அறிந்துக் கொள்ளுங்கள் நீங்கள் முஸ்லிம்கள்தான் அல்லாஹ் உங்களை முஸ்லிமாக்கி கண்ணியப்படுத்திய பின் உங்களை நீங்களே முஸ்லிம் என்பதை விட தமிழன் என்றுதான் கருதுவேன் என்றால் அல்லாஹ் கொடுத்த கண்ணியத்தை நீங்கள் வெறுத்துவிட்டீர்கள் இதைவிட பேரழிவு எவனுக்காவது உண்டா? சிந்திக்க வேண்டாமா?

இதோ கடந்த காலங்களில் ஏக இறைவனை மறுப்போரை தலைவர்களாக ஏற்று பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொண்ட மக்களுக்கு எதிராக என் இறைவன் கூறியதை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம்! இதன் மூலம் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறோம்!

அவர்களில் அதிகமானோர் (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் தயாரித்தது கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 5:80)

அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர். (திருக்குர்ஆன் 58:14)

பலவீனமான முஸ்லிம்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கிறோம்

என் அன்பிற்கினிய பலவீனமான முஸ்லிம் சகோதர சகோதரிகளே நீங்கள் காஃபிர்களை அதாவது ஏக இறைவனை மறுப்போரை உற்ற தலைவர்களாக ஆக்கிக் கொண்டு அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தமிழ்தான் என் தாய் மொழி, தமிழ்தான் என் உயிர் மூச்சு என்று சுற்றித் திரிகிறீர்கள் கீழ்க்கண்டவைகளை நீங்கள் உணரவில்லையா?

  • உங்கள் குர்ஆன் அரபு மொழியில் உள்ளது
  • உங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அரபு மொழி பேசியவர்
  • உங்கள் இறைவன் அரபு மொழியை கண்ணியப்படுத்தியுள்ளான்
  • உங்கள் மறுமை வாழ்க்கை அல்லாஹ்விடத்தில் உள்ளது
  • நீங்கள் அல்லாஹ்விடமே திரும்ப செல்வீர்கள்
  • நீங்கள் கப்ரு வாழ்க்கையை சுவைத்தே ஆக வேண்டும
  • கப்ருகளில் தமிழ் இருக்குமா? அல்லாஹ்வின் மொழி இருக்குமா?

அல்லாஹ்வின் மொழி பற்றி அறிவிக்கட்டுமா?

  • எந்த இறைவன் தன் மலக்குமார்களிடம் உறையாடினானோ?
  • எந்த இறைவன் இப்லீஸ் என்னும் ஷைத்தானிடம் உறையாடினானோ?
  • எந்த இறைவன் நபி ஆதம் (அலை) அவர்களிடம் உறையாடினானோ?

அந்த இறைவன் உங்களிடம் அவன் மொழியில் உறையாட மாட்டானா?

அல்லாஹ்வின் மொழி மிக சுலபமானது, மிக எளிமையானது, மிக அழகானது அந்த மொழியில்தான் அனைத்தும் இயங்கிக் கொண்டுள்ளது இன்றும் அந்த மொழி நம்மைச் சுற்றி உள்ளது ஆனால் அந்த மொழிக்கும் நமக்கும் ஒரு திரை உள்ளது அதனால் அல்லாஹ்வின் மொழியை நம்மால் உணரமுடியவில்லை? இதோ

(முஹம்மதே!) பூமியில் உள்ளதையும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத்துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 22:65)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன் 7:54)

  • ஒவ்வொரு பொழுதும் சூரியன் உதிக்கிறது மறைகிறது,
  • சந்திரன் ஒளிர்கிறது மறைகிறது,
  • நட்சத்திரம் மின்னுகிறது, மறைகிறது,
  • மேகங்கள் மோதுகின்றன,
  • மின்னல்கள் மின்னுகின்றன,
  • மழை பொழிகிறது,
  • பலத்த காற்றுகள் வீசுகின்றன,
  • கடலின் அலைகள் கொந்தளிக்கின்றன

இவைகள் சாதாரணமாக நடைபெறவில்லை மாறாக அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன!

எனவே அல்லாஹ் தன் மொழியால் இவைகளின் மீது தனது கட்டளைகளை இன்றளவும் இந்த விநாடியும் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்!

இதுதான் இறைவனின் மொழியாகும் அந்த மொழியை உயிர் உள்ளவரை மனிதனால் உணர முடியாது நீங்கள் மரணித்த அடுத்த வினாடியே உங்கள் ரூஹ் உங்கள் மலக்குள் மவ்த் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வானவர்களிடம் பேச முற்படும் அதன்பின் நீங்கள் மறுமையின் மொழியினை மிகச் சரளமாக பேசும் ஆற்றல் கொண்டு திகழ்வீர்கள் ஆதாரம் இதோ!

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று இவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?” என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம். (திருக்குர்ஆன் 4:97)

அறிந்துக் கொள்ளுங்கள் உங்கள் உயிர் தொண்டைக் குழியை விட்டு பிரியும் வேலையில் அல்லாஹ்வின் மொழியை நீங்கள் உணர்வீர்கள் அந்த மொழியில் வானவர்களுடன் நீங்களும் பேசக்கூடியவர்களே!

(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! (திருக்குர்ஆன் 8:50)

உங்கள் உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவார்கள் எனவே அல்லாஹ்வின் மொழி மறுமை மொழியை உயிர் தொண்டைக்குழியை அடையும் போது உணர்வீர்கள் அதில் சரளமாக எந்த தடங்களும் இன்றி பேசுவீர்கள் இதுமட்டுமா? இதோ கீழ்கண்ட நபிமொழியை சமர்ப்பிக்கிறோம்!

“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்   (ஸல்)  குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்   (ஸல்)  அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்   (ரலி) ஆதாரம் : புகாரி)

உலகத்திலேயே சிறந்த மொழி அல்லாஹ் பேசக்கூடிய மொழியாகும் அந்த அழியாத மொழியாகும் அது அல்லாஹ்வின் காலத்தில் உள்ள மொழியாகும் அந்த மொழியைத் தவிர உலகில் தோன்றிய எந்த மொழியாக இருந்தாலும் அழியக்கூடியதே சில மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன இனி வரும் காலங்களிலும் சில மொழிகளுக்கு அழியும் நிலை வரலாம் அதில் தமிழும் இருக்கலாம்!

எனவே முஸ்லிம்களே அல்லாஹ் எந்த மொழியையும் உயர்த்தியோ தாழ்த்தியோ கூறவில்லை மொழி பற்றிய ஞானமும் மறைவான விஷயத்தில் உள்ளதாகும் அதற்கு சான்று அல்லாஹ் பேசக்கூடிய மொழியாகும் எனவே அல்லாஹ் சொல்லாத ஒன்றை செய்யாதீர்கள் அல்லாஹ் சில மொழிகளை சிறப்பித்துள்ளான் அரபு மொழியும் அதில் ஒன்று எனவே அல்லாஹ் சிறப்பித்த அரபு மொழிக்கு மேல் தமிழ் மொழியையோ ஆங்கில மொழியையோ சிறப்பித்தால் அது ஷிர்க் என்னும் இணைவைப்பில் உங்களை தள்ளிவிடும்! புரியவில்லையா?

தமிழ் மொழிதான் சிறந்தது, கன்னடம்தான் சிறந்தது, சிங்கள மொழிதான் சிறந்தது என்று மொழியை வாதிட்டால் ஷிர்க் என்னும் இணைவைப்பில் மூழ்கும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்!

  • அல்லாஹ் சிறப்பித்த அரபு மொழியை விட தமிழ் மொழிதான் சிறந்தது என்று நீங்கள் கூறினால் அல்லாஹ்வை விட நீங்கள் உயர்ந்தவராகி விடுகிறீர்கள்

எனவே அல்லாஹ் அளவுக்கு உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளாதீர்கள் கேடுகெட்ட அரசியல் கூத்தாடிகள் பின்னால் அணிவகுத்து நின்று அல்லாஹ்வுடன் போட்டி போடாதீர்கள்!

மொழி என்பது ஒருவருக்கொருவர் நட்புறவை பகிர்ந்துக் கொள்ளும் பாலமே அந்த பாலத்தை அறுத்து பாதாளத்தில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று எச்சரித்துக் கொண்டு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்!

மொழிகளிலேயே சிறந்த மொழி என் இறைவன் அல்லாஹ் மலக்குமார்கள், இப்லீஸ் மற்றும் நபி ஆதம் (அலை) அவர்களிடம் பேசிய மற்றும் மறுமையில் நம்மிடம் பேசக்கூடிய அந்த தெய்வீக மொழியே ஆகும் அதைத் தவிர உள்ள அனைத்து மொழிகளும் அதற்கு நிகராக ஆகாது இருப்பினும் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அல்லாஹ் குர்ஆனில் அங்கீகரித்துள்ளான் இது அந்த அரபு மொழிக்கான சிறப்பம்சமாகும் இந்த அங்கீகாரம் தமிழ் உட்பட பிற எந்த மொழிக்கும் கிடையாது என்பதே நிதர்சன உண்மை!

புரிந்தவன் புத்திசாலி புரிய மறுப்பவன் தர்க்கசாலி! ஸலாம்!

இறைவா! இக் கட்டுரையை படிக்கும் மூமின்களின் முகங்களை பிரகாசிக்கச் செய்வாயாக!

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. (அல்குர்ஆன் 26:83-85, 87)

அல்ஹம்துலில்லாஹ்!

(புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே)

அல்லாஹு அக்பர்!

(அவன் மிகப் பெரியவன்)

ஸுபுஹானல்லாஹ்!

(அவன் தூயவன்)

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்