முகநூல் டிப்ஸ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதர சகோதரிகளே! நாம் முகநூலில் சில பதிவுகளை ஆவேசத்துடன் எழுதிவிடுவோம் பின்னர் அவ்வாறு பதிவிட்ட பதிவுகள் பற்றி எச்சரிக்கைகளை கண்டவுடன் பயத்தில் உறைந்துவிடுவோம் அந்த கவலை இனி வேண்டாம் இதோ உங்களுக்கு எளிய முறையில் பயத்தை போக்குகிறேன்.

முகநூலில் இரண்டு வகையான வழிகளில் உங்கள் மீது பிரச்சினை வரலாம்

1) உங்கள் பதிவுகளை Search செய்து பார்த்து குற்றம் கண்டுபிடிக்கலாம்

2) உங்கள் பழைய பதிவுகளை நேரடியாகவே பார்த்து குற்றம் பிடிக்காலாம்

எனவே இங்கு இரண்டு வகையிலிருந்தும் தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கு வழங்குகிறேன்!

பாடம் 1

டிப்ஸ் 1

முகநூலில் நீங்கள் பதித்துள்ள பதிவுகளை தேடாமல் இருக்க முகநூல் பக்க Search Engine Data-வை அழித்தல் தொடர்பாக

1

உங்கள் முகநூலின் மேல் பக்க மூளையில் தலைகீழாக ஒரு முக்கோன வடிவம் உள்ளது அதை கிளிக் செய்யவும்! பின்னர் கீழ்க்கண்டவாறு ஒரு பாக்ஸ் அறிவிப்பு தோன்றும் அதில் Activity log என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்!

2.jpg

இதை கிளிக் செய்தவுடன் கீழ்க்கண்ட பகுதி தென்படும்

3

இதில் வட்டமிடப்பட்டுள்ள MORE என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் பின்னர் கீழ்க்கண்ட பகுதி தோன்றும் அதில் வட்டமிடப்பட்டுள்ள Search Historyயினை கிளிக் செய்யவும்!

4.jpg

கீழ்க்கண்ட பகுதியில் உங்கள் பதிவுகளை யாரும் தேடி அதில் உள்ள தவறான கருத்துக்களை நோட்டமிடாமல் இருக்க Clear Searches என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் முகநூலில் நீங்கள் பதிவு செய்த டேட்டாக்களை யாராலும் தேடி கண்டுபிடிக்க இயலாது!

5.jpg

பாடம் 2

டிப்ஸ் 2

உங்கள் பழைய பதிவுகளை டெலிட் செய்ய

முகநூல் பக்கத்தில் நீங்கள் பதித்த சில தவறான பதிவுகள் அல்லது தேவையில்லாத பதிவுகளை ஒரே வீச்சில் டெலிட் செய்ய (அழிக்க) சில டிப்ஸ்கள்!

உங்கள் முகநூல் பக்கத்தில் Profile Page போகவும்

6.jpg

மேலே உள்ள வட்டமிடப்பட்ட பகுதியில் இருக்கும் Manage Posts-ஐ கிளிக் செய்யதவுடன் Posted by பகுதியில் YOU என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவேற்றம் செய்த அனைத்து POSTகளும் வரும் பின்னர் November 2019 ஐ கிளிக் செய்தால் 29 முதல் 50 வரையிலான POSTகள் Select ஆகும்

7.jpg

பின்னர் அதே பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள NEXT பட்டனை அழுத்தவும்

8.jpg

NEXT என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்க்கண்ட டையலாக் பாக்ஸ் வரும்

9.jpg

இதில் டெலிட் போஸ்ட் என்று கிளிக் செய்து Done கொடுத்தால் நிரந்தரமாக உங்கள் 50 வரையிலான BULK பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும்!

பயப்படாமல் மீ்ண்டும் புதிய பதிவுகளை பதிவிடலாம்!

 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.