ஜின்களின் கூட்டத்தினரே மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்!

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

ஜின்களின் கூட்டத்தினரே மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்!

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிகழட்டுமாக!

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (குர்ஆன் 50:37)

முன்னுரை

இந்த கட்டுரை இரண்டு பிரிவுகளாக மிக நீண்டதாக அமைந்திருக்கும் முதல் பகுதி-1 ஷைத்தான் மற்றும் ஜின்கள் பற்றியும் இறுதிப் பகுதி-2 கட்டுரையின் தலைப்பாகவும் அமைத்துள்ளோம்.

நீங்கள் தெளிவான அறிவுரை பெறுவதாக இருந்தால் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிக்க வேண்டும் மாறாக இறுதிப் பகுதி கிளைமேக்ஸ் படித்தால் குழப்பம்தான் நீடிக்கும் எனவே பொறுமையாக ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சிந்தித்துப் படியுங்கள் இறைவன் நற்சிந்தனையை ஏற்படத்துவானாக!

முதல் பகுதி-1

நம்முடைய வாழ்க்கை முறை

01

இன்றைய நவீன கால கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம் எதற்காக மரணிக்கிறோம் என்று கூட சிந்திப்பதில்லை லேப்டாப், வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற செயலிகளில் வாழ்வைத் தொலைத்துவிட்டோம் இந்த அலங்காரங்களில் நாம் மிதந்துவிட்டோம் சிந்திக்கத் தவறி வாழ்க்கையில் நாம் மிகவும் மயங்கிவிட்டோம்.

உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா? (குர்ஆன் 28:60)

நமக்குத் தெரிந்ததெல்லாம் சுகபோகமாக வாழ வேண்டும்,

02

  • விடிந்தவுடன் தேநீர் அருந்த வேண்டும்,
  • காலையில் இரண்டு இட்லி சாப்பிட வேண்டும்,
  • மதியம் பிரியாணி குஷ்கா சாப்பிடவேண்டும்
  • மாலையில் சுண்டல்
  • மீண்டும் இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு
  • அழகாக தூங்க வேண்டும்

வருடத்தின் 365 நாட்களும் இதுதான் நிகழ்ந்துக் கொண்டு உள்ளது இதுதான் வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டோம் இவ்வாறே நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம் இதற்குப் பெயர்தான் மனிதப் பிறவியா அவ்வாறு நீங்கள் கருதினால் அது உங்களுடைய முட்டாள்தனமானமாகும். சிந்திக்க மாட்டீர்களா?

நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (குர்ஆன் 6:48)

சிந்திக்காமல் வாழக்கூடிய மனிதர்களே! மரணம் நம்மை எந்த விநாடியம் அணுகலாம் நம் உயிரைப் பறிக்க நியமிக்கப்பட்ட மவ்துல் மலக்கு எனும் வானவர் எந்நேரமும் நம் வாசல்கதவை தட்டலாம் ஆகவே விழித்துக் கொள்ளுங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

ஆம் ஒவ்வொரு விநாடியும் ஷைத்தான் மற்றும் கெட்ட ஜின்களின் ஈனச் செயல்களால் நாம் வழிகெடுக்கப்பட்டு வருகிறோம் அதை உணர்த்தவே இந்த கட்டுரையாகும் எனவே சற்று செவிதாழத்திக் கேளுங்கள் உங்களை நீங்களே மறுமைக்காக தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்ற நல்லெண்ணத்தின்படி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன் நீங்கள் விழித்துக் கொள்வதற்காகவே!

ஷைத்தான் வழிகெடுப்பான்

ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துள்ள வார்த்தை ஷைத்தான் வழிகெடுப்பான் நரகில் தள்ளிவிடுவான் என்பதே ஆனால் இதை அழகாக தெளிவாக அறிந்து வைத்துள்ள நாம் அந்த ஷைத்தானை எதிரியாக கருதாதது ஏன் என்பதே வியப்பாக உள்ளது. இதோ இறைவன் கூறும் அறிவுரையை கேளுங்கள்!

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான். (குர்ஆன் 35:6)

ஷைத்தான் எவ்வாறு வழிகெடுப்பான்

மனிதனை ஷைத்தான் வழிகெடுப்பான் என்பதை உணர்ந்த நாம் அவன் எவ்வாறு வழிகெடுக்கிறான் என்பதை உணரத் தவறுகிறோம் இந்த பிரச்சினையில் மனிதன் சிக்கி தன் கவனத்தை இழந்துவிடக்கூடாது என்று வல்ல ரஹ்மான் அருள்மறை குர்ஆனில் விடை கொடுக்கிறான் இதோ கீழ்க்கண்ட வசனத்தை சற்ற கவனமாக சிந்தித்து படியுங்கள்!

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (குர்ஆன் 16:63)

நாம் செய்யும் செயல்களில் நல்லவைகளும் உள்ளன தீயவைகளும் உள்ளன நல்ல செயல்கள் மூலம் மனித சமுதாயத்திற்கும் நமக்கும் நல்லவற்றை செய்யலாம் அதே போன்று தீய செயல்களால் நமக்கும் நம்மை சார்ந்த சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கலாம்.

ஆக இங்கு நன்மையான காரியங்களில் ஈடுபடுவது நபிமார்களின் வழிமுறையை பின்பற்றும் நற்காரியங்களாகவும் கேடுகெட்ட காரியங்களை பின்பற்றுவதன் மூலம் ஷைத்தானின் கேடுகெட்ட சிந்தாந்தங்களை பின்பற்றுவதாகவும் அமைகிறது.

எனவே ஷைத்தான் தன் தீய எண்ணங்களை நம் உள்ளத்தில் விதைத்து அதை நாம் அனுமதித்துக் கொண்டால் அந்த தீய செயல் தீய விளையை ஏற்படுத்தி நரகத்தின் பக்கம் நம்மை தள்ளிவிடுகிறது.

ஷைத்தான் ஜின் இனத்தை சேர்ந்தவன்!

ஷைத்தான் அனைத்து மனித வர்க்கத்திடமும் நேரடியாக தீய காரியங்களை தூண்டிவிடுகிறான் எனினும் நாம் அந்த தீய காரியங்களில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்காகவே தன் இனத்தில் தன்னை நம்புவோரின் துணைக் கொண்டு நம்மை வழிகெடுக்கிறான் அப்படியானால் ஷைத்தானால் பணியமர்த்தப்பட்ட அவனுடைய இனம் எது? ஆச்சரியமாக உள்ளதா இதோ ஷைத்தானுடைய இனம் இதுதான்

“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் (ஏகத்துவத்துக்கு இணைவைப்பைப்) பகரமாக்கியது மிகவும் கெட்டது. (குர்ஆன் 18:50)

ஜின் இனம் பற்றி அறிவோமா?

மனித இனம் படைப்பதற்கு முன்னர் படைக்கப்பட்ட இனம்தான் ஜின்களின் இனமாகும்.

இந்த இனத்தைச் சேர்ந்தவன்தான் இப்லீஸ் எனும் ஷைத்தான் ஆவான்.

இதை மேற்கண்ட குர்ஆன் 18:50 வசனம் உண்மைப்படுத்துகிறது. ஆனால் மனித இனம் களிமண்ணாலும் ஜின் இனம் நெருப்பாலும் படைக்கப்பட்டதாகும் இரண்டு இனங்களும் இறைவன் படைப்பாக இருந்தாலும் ஒரு இனமாக ஆகாது மேலும் இந்த இரு இனங்களுக்கு மத்தியில் ஒருமித்த உறவுமுறை (திருமண உறவுமுறை) ஏற்படாது மாறாக அன்பு காட்டுவதிலும் துரோகம் இழைப்பதிலும் சகோதர இனமாக திகழலாம்! ஆதாரம் இதோ

“உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதரசமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் “எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!” என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். “ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று (அவன்) கூறுவான். (குர்ஆன் 7:38)

ஜின்கள் அனைவரும் கொடியவர்களா?

ஜின்கள் என்றாலே தீய குணம் கொண்ட கொடிய ஷைத்தான்கள் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள் ஜின்கள்  நல்லவர்கள் முஸ்லிம்கள் உள்ளனர் இதோ ஒரு நபிமொழி!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் (4504)

நம்மை படைத்து பரிபாலித்து அருள்புரிகின்ற வல்ல ரஹ்மான் ஜின்களின் மீதும் கருணை காட்டுகிறான் இதோ இறைவனின் கருணை மனிதர்கள் மீது மட்டுமல்லாது ஜின்களின் மீதும் உள்ளதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (5312)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே மேற்கண்ட குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வாயிலாக ஜின்கள் மற்றும் அவர்களில் உள்ள நல்லோரை நாம் அறிந்துக் கொண்டோம் இப்படிப்பட்ட நல்ல ஜின்களால் மனித சமுதாயத்திற்கு எவ்வித கேடும் ஏற்படுவதில்லை மாறாக இவர்கள் நம்மைப் போன்றே இறையச்சம் கொண்டவர்களாக மறுமையை எதிர்ப்பார்த்தவர்களாக ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதவர்களாக இருக்கலாம் என்று உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் மனிதன் மற்றும் ஜின்கள் சமுதாயம் சகோதர சமுதாயமாக திகழ்கிறது. ஜின்களை திட்டாதீர்கள் அவர்களிலும் நல்லோர் உள்ளனர் அவர்கள் வருந்துவார்கள்.

வழிகெடுக்கும் ஜின்கள்!

மனிதர்களில் எவ்வாறு வழிகேடர்கள் உள்ளனரோ அவ்வாறே ஜின்களிலும் ஷைத்தானைப் பின்பற்றக்கூடிய வழிகெட்ட ஜின்கள் உள்ளனர் அதற்குரிய ஆதாரம் இதோ கீ்ழே சமர்பிக்கிறோம்.

“இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான். (குர்ஆன் 7:18)

ஜின்களை மனிதன் அவர்களுடைய உண்மையான தோற்றத்தில் காண இயலாது மாறாக பாம்புகள் மற்றும் விலங்கினங்களின் தோற்றத்தில் காணலாம் இதற்கு ஆதாரம் உள்ளது இதோ ஒரு நபிமொழி!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் (4504)

மனிதன் ஜின்களை வழிகெடுக்கலாம்!

04

மனிதர்களில் சில ஆண்கள் ஜின்களின் சில ஆண்களை தங்கள் கடவுளாக கருதி வந்துள்ளதாக குர்ஆன் பறை சாற்றுகிறது ஆக முற்காலத்தில் ஷைத்தானின் சூழ்ச்சியின் காரணமாக மனிதர்களில் ஆண்கள் ஜின்களில் ஆண்களிடம் வழிபாட்டு முறையில் நட்புறவில் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாக புரிகிறது அதற்கான ஆதாரம் இதோ!

மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்குக் கர்வத்தை அவர்கள் (மனிதர்கள்) அதிகமாக்கி விட்டனர். (குர்ஆன் 72:6)

மேற்கண்ட வசனத்தை நாம் மறுக்க இயலாது காரணம் ஜின்களில் ஆண்கள் ஏதோ ஒரு வகையில் மனிதர்களில் ஆண்களிடம் ஒருவகையான மனதை வசியப்படுத்தும் தீய எண்ணங்களை போதிக்கும் சூனியக் கலையின் மூலம் ஆதிக்கம் செய்து வந்துள்ளனர் எனினும் மனிதனால் இந்த கெட்ட ஜின்கள் வழிகெட்டு தங்களைத் தாங்களே கடவுளாக கருதி கர்வப்பட்டு இறைவனின் கோபப் பார்வைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ஆக ஜின்களால் மனித இனத்தை கட்டுப்படுத்த இயலாது மாறாக அவர்களை மதி மயக்கி வழிபடச் செய்ய இயலும் என்ற உண்மை புலனாகிறது.

மேற்கண்ட வசனத்தின் மூலம் ஜின்களை மனிதனும் மனிதனை ஜின்களும் வழிகெடுக்கலாம் என்பது உறுதியாகிறது இருப்பினும் இந்த வழிகேடு என்பது மனிதன் உடலுக்குள் ஜின் புகுந்துவிடும் என்றோ மனிதனை ஆட்டிப் படைக்கும் என்றோ கருதினால் அது மாபெறும் தவறான கருத்தாகும் மாறாக மனிதனின் எண்ணங்களில் ஜின்கள் விளையாடும் என்பதாக நாம் கருத வேண்டும். இவ்வாறு சிந்திக்கும் போது ஜின் மலாமத்து ஏர்வாடி இணைவைப்பு போன்ற பிரச்சினை ஏற்படாது!

ஜின்கள் மனிதர்களை வழிகெடுக்கும் என்பதை நிறூபிக்கும் குர்ஆன் வசனம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் இதோ

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏகஇறைவனை) மறுத்தோர் கூறுவார்கள். (குர்ஆன் 41:29)

என்னுடைய வாதத்தில் நான் பொய்யனாக இருந்திருந்திருந்தால் குர்ஆன் வசனத்தை முன்வைக்காமல் என் மனம் போன போக்கில் பிறரைப் போன்றே உளர இயலும் மேலும் மக்கள் ஜின்களால் உடல் ரீதியாக இல்லாமல் மன ரீதியாக கெட்ட எண்ணங்களின் அடிப்படையில் பாதிக்கப்படுவது உண்மைதான் என்பததை உணர்த்தவே இந்த வசனத்தை முன்வைக்கிறேன் உண்மையை மூடி மறைக்கவோ அல்லது மக்களின் பார்வைக்கு சென்றால் அவர்கள் தாயத்து தட்டு தகடு கட்டி வழிகெடுவார்கள் என்றோ கருதினால் நான் பொய்யனாக ஆகிவிடுவேன்.

ஷைத்தான் எவ்வாறு உள்ளத்தில் தீய எண்ணங்களை போடுகிறானோ அப்படியே அவனுடைய வம்சாவழியான ஜின் கூட்டமும் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை விதைக்கின்றன!

ஜின்களுக்கு பயந்து தாயத்து கட்டலாமா?

ஜின்கள் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களையும் விதைக்கின்றன என்றவுடன் ஜின்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள மந்திரித்த தாயத்து கட்டலாம் என்று பொருள் கொண்டால் அது உங்கள் மடமையே. இதோ தாயத்து கட்டக்கூடாது என்பதற்கான நபிமொழி ஆதாரம் உள்ளது!

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

 உங்களுக்கு ஒரு அழகிய விளக்கம் தருகிறோம் ஜின்கள் மனிதனுடைய உள்ளத்தில் தீய எண்ணங்கள் போடும்போது அதை தடுக்க நாம் ஏன் தாயத்து கட்டக்கூடாது என்று உங்களை உசுப்பிவிட சில மூட முல்லாக்கள் மூலைச் சலவை செய்யலாம் அறிந்துக் கொள்ளுங்கள்!

05ஜின்கள் உள்ளத்தில் தீமையை விதைப்பதை விட இப்லீஸ் அதிகமாக தீமையை விதைக்கிறான் மேலும் ஜின்கள் மனித உடலில் ஊடுருவுவது இல்லை ஆனால் ஷைத்தான் மனிதனது இரத்த நாளங்களில் ஊடுறுவி காணப்படுகிறான் ஆக ஜின்களை விட ஷைத்தானுக்கே மனிதனை வழிகெடுக்க அதிக ஆற்றல் உள்ளது எனவே ஷைத்தானுக்கு எதிராக எந்த மூட மூல்லாவும் தாயத்து கட்டி தொங்க விட அறிவுறுத்தமாட்டார்.

04

எனவே தாயத்து கட்டி தொங்க விடுவது ஜின்களை கட்டுப்படுத்த அல்ல மாறாக ஜின்களை வழிபட வழிவகை செய்துவிடும் அது மாபெரும் இணைவைப்பு செயலாகும் எனவே ஜின்களை கட்டுப்படுத்த ஹஜரத்துகளிடம் சென்று தாயத்தை கட்டிக் கொண்டால் கீழ்க்கண்ட இணைவைப்பு செயல் நடைபெறுவது மட்டுமல்லாது ஜின்களை கர்வப்படுத்தும் செயலுமாகும்.

மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்குக் கர்வத்தை அவர்கள் (மனிதர்கள்) அதிகமாக்கி விட்டனர். (குர்ஆன் 72:6)

ஜின்களுக்கு பயந்து தாயத்து கட்டி தொங்க விடுபவன் நம்மைச் சேர்ந்தவனாக இருக்க இயலாது மாறாக குப்ரு இறை நிராகரிப்பு மற்றும் இறைவனுக்கு இணைவைக்கும் கூட்டத்தாராகவே இருக்க இயலும் எச்சரிக்கிறோம்!

இறுதிப் பகுதி-2

இனி கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வருவோம்

 ஜின்களிடம் அடிமையாகும் மனித இனம்!

 மனிதர்களை ஜின்கள் எவ்வாறு வழிகெடுக்கும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன மேலும் ஜின்கள் மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் வாய்ந்தது மனிதன் ஆயுட்காலம் ஜின்களின் ஆயுட்காலத்தைவிட குறைவானதே இருப்பினும் ஜின்கள் நீண்ட ஆயுட்காலத்தை பெற்றிருக்கும் என நம்பலாம்!

ஜின்களுக்கு அபரிமித ஆற்றல் ஏன் உள்ளது?

மனிதனைக் காட்டிலும் ஜின்களுக்கு அபரிமித ஆற்றல் கொடுக்கப்பட்டது உண்மைதான் இதற்கு குர்ஆனில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன இதோ

06

“உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. (குர்ஆன் 27:39)

மேற்கண்ட குர்ஆன் வசனம் நபி ஸுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்கிஸ் என்ற அரசியைப் பற்றியும் அவள் இறைவனுக்கு மாறு செய்து சூரியனுக்கு ஸஜ்தா செய்ததையும் அறிவிக்கும் இப்ரீத் என்ற ஜின் ஸுலைமான் நபியிடம் அந்த அரசியின் சிம்மாசனத்தை கண் இமைக்கும் நேரத்தில் கொண்டுவந்து கொடுப்பதாக கொடுக்கும் வாக்குறுதிதான் இது.

07

இந்த வசனத்தின் படி ஜின்கள் காலத்தில் பயணிக்கும் அதாவது ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது நமது கண்களுக்கு புலணாகிறது. இது எவ்வாறு சாத்தியம்? இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை முன்வைக்கிறோம்!

08

மனிதன் சராசரியாக 60 முதல் 100 வயது வாழக்கூடியவன் ஆனால் ஒரு ஈ அல்லது கொசு சராசரியாக 7 நாட்கள் வரையே வாழும். இப்படிப்பட்ட சூழலில் மனிதனின் காலமும் ஈ அல்லது கொசுவின் காலமும் ஒன்றாகாது! மனிதனின் காலத்தில் ஒரு ஈ அல்லது கொசு பயணிக்க இயலும் ஆனால் கொசுவின் காலத்தில் ஒரு மனிதனால் பயணிக்க இயலாது! குழப்பமாக உள்ளதா? இதை நிறூபிக்க இயலும்!

ஈக்களுக்குச் சில அசாத்திய சக்திகள் இருகின்றன. அவற்றில் ஒன்று ஈக்களின் கண்கள். இவற்றுக்கு ‘மைக்ரோஸ்கோப்’ பார்வை உண்டு. மனிதர்களின் கண்களைவிடப் பத்து மடங்கு அதிக வேகம் கொண்ட ‘ரிஃப்லெக்ஸ்’ ஈக்களின் கண்களில் உள்ளன எனவே ஒரு ஈ நம் தோலில் அமர்ந்து விட்டால் அந்த ஈயை அடிக்க நாம் கையை உயர்த்துகிறோம் ஆனால் நம்மால் அதை விரட்ட முடியுமே தவிர அடிக்க முடிவதில்லை காரணம் ஈயின் வேகம் நம்முடைய வேகத்தைவிட பண்மடங்கு வேகமாக உள்ளது. நாம் கையை உயர்த்தும் அசைவுகளை அந்த ஈ உணர்ந்து விரைவாக நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுகிறது இங்கு மனிதனின் காலத்தில் (TIME) ஒரு ஈயினால் பயணிக்க முடிகிறது ஆனால் ஈயின் காலத்தில் ஒரு மனிதனால் பயணிக்க இயலாது!

09

ஒரு கொசு அல்லது ஈயின் ஆயுட்காலம் நம் பார்வையில் 7 நாட்கள்தான் ஆனால் அந்த கொசு அல்லது ஈயின் பார்வையில் அதன் வேகத்தின் அடிப்படையில் அவை குறைந்த பட்சம் 100 வருடங்கள் அல்லது அதற்கு மேல் வாழலாம் இதுவே காலப் பயணம் (TIME JOURNEY) என்கிறோம்.

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. (குர்ஆன் 22:47)

எனவே சாதாரண ஒரு ஈயின் வேகத்தைக் கூட மனிதனால் கடக்க இயலாது இது சாத்தியம் எனில் ஜின்கள் மனிதனின் வேகத்தைவிட பண்மடங்கு வேகமாக காணப்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது மாறாக இறைவனின் படைப்பின் அழகாகும்.

கொசு மற்றும் ஈக்களுக்கு வழங்கிய வேகத்தை விட பன்மடங்கு வேகத்தை ஜின்களுக்கு இறைவன் வழங்கியுள்ளான் அதே நேரத்தில் மனிதனுக்கு மூளையை வழங்கியுள்ளான் எனவேதான் மனிதனை இறைவன் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்க தூண்டுகிறான்.

கெட்ட ஜின்கள் வழிகெடுக்கும்!

மனிதனை ஷைத்தான் மற்றும் ஜின்கள் வழிகெடுக்கின்ற என்பது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் கருதலாம் அதற்கு ஷைத்தான் மிகப்பெரிய சாட்சியாக திகழ்கிறான்

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். “உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்;   அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான். (குர்ஆன் 4:118,119)

மேற்கண்ட அருள்மறை வசனத்தில் மனித வர்க்கத்தை ஷைத்தான் ஆசை வார்த்தைகளைக் கொண்டு வழிகெடுப்பதாக சூளுரைக்கிறான் மேலும் தனது கட்டளைக்கு அவர்கள் அடிபணிந்து கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் என்றும் கர்ஜிக்கிறான்! ஆக ஷைத்தானாகிய இப்லீஸ் ஜின் கூட்டத்தை சேர்ந்தவனாக இருப்பதால் அவன் தன்னை வழிபடும் தனது ஜின் கூட்டத்தைக் கொண்டும் வழிகெடுக்கலாம் என்று கருதலாம் இதற்குரிய ஆதாரமாக கீழ்க்கண்ட அருள்மறை வசனம் திகழ்கிறது.

அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் “ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்” (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் “எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர” (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். (குர்ஆன் 6:128)

ஜின்கள் உள்ளத்தை எவ்வாறு வழிகெடுக்கின்றன?

10

ஜின்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதை நாம் அறிவோம் அவை ஸுலைமான் நபி காலத்தில் ஒரு அரசியின் சிம்மாசனத்தை கண் இமைக்கும் நேரத்தில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளதையும் வானத்தில் ஏறி மலக்குகளின் ஓரிரு சொற்களை கேட்கக் கூடியதாகவும் உள்ளதை அறிவோம் ஆதாரம் இதோ

(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம் அவர்களை விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு. (குர்ஆன் 37:8, 9, 10)

ஆக ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஜின்கள் மனிதனின் மீதும் ஒளியின் தாக்கத்தில் கெட்ட எண்ணங்களை பரப்புகின்றன. அதற்கரிய ஆதாரம்தான் ஒளியின் வேகத்தில் ஊடுறுவிச் செல்லக்கூடிய சினிமா காட்சிகள், பாடல் காட்சிகள், ஆபாச நடனங்கள், விபச்சார சினிமாக்கள் மற்றும் முகநூல் ஆண் பெண் இன்பாக்ஸ் கலந்துரையாடல்கள்! சிந்திக்கவே உங்கள் எண்ணம் மறுக்கிறதா?

ஒளியின் வேகத்தில் ஆபாசம்

இன்று மனிதன் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான் அந்த ஆராய்சிகளின் மூலமாக வானொலி, தொலைக்காட்சி, கைபேசி, மொபைல் ஆண்ட்ராய்டு போன்றவை வந்தன இந்த அனைத்து தொழில் நுட்ப செயலிகளும் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன.

11

உதாரணமாக ஐரோப்பாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை வீட்டில் ஒரு இருட்டறையில் நாம் அமர்ந்து பார்க்கிறோம் இது ஆச்சரியப்பட வைக்கவில்லையா? இதைத்தானே நபி ஸூலைமான் (அலை) காலத்தில் இப்ரீத் ஜின் கூறிய வார்த்தை இதோ

“உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. (குர்ஆன் 27:39)

நபி ஸூலைமான் (அலை) காலத்தில் கண் இமைக்கும் முன் அரசியின் சிம்மாசனத்தை கொண்டு வரும்போது அது காலத்தில் ஒளியின் வேகத்தில் பயணிக்க செய்த செயலாக இருந்தது அதைத்தான் இன்று நாம் ஐரோப்பாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் ஒரு கோல் அடிக்கப்படும் போது அதை கண் இமைக்கும் வேகத்தில் சென்னை, திருப்புர், வேலூர் சேலம் நாமக்கல்லில் நேரத்தில் பார்க்கிறோம். ஆக தொலைக்காட்சி வாயிலாக கால்பந்தாட்ட போட்டியை நாம் காணும் போது ஆபாச நடனங்கள், விபச்சார படங்கள், உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் ஆபாச பேஷன் ஷோக்களை பார்க்கிறோம் இதை ஒளிபரப்பக்கூடிய அந்த மனிதனின் உள்ளத்தில் ஆசை வார்த்தை போடுபவன் யார் ஷைத்தான் தானே அந்த ஷைத்தான் ஜின் இனத்தவன்தானே இதை சிந்திக்கமாட்டீர்களா?

12

வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளத்தில் குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் வருகின்றன அதை நாம் மறுக்கவில்லை அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாக நாம் கருதலாம்!

14

அதே போன்று அதே ஊடகங்களில் ஆபாச நிகழ்ச்சிகள், ஆபாச வர்ணனைகள், நிர்வாண காட்சிகள் வருவதை ஷைத்தான் மற்றும் அவனுடைய தோழர்களான ஜின்களுடைய புறத்திலிருந்து வருவதாக நாம் கருதினால் இந்த கீழ்க்கண்ட வசனம் எதை உணர்த்துவதோ அதை நாம் உணர முற்பட வேண்டும்!

அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்” (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் “எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர” (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். (குர்ஆன் 6:128)

“ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்” (என்று கூறுவான்). என்ற சொல் எதை உணர்த்துகிறது என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு உண்மையை உணரச் செய்வான்.04

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். (குர்ஆன் 114:5)

என்னுடைய கருத்து வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளங்களை ஷைத்தான் மற்றும் ஜின்கள் இயக்குகின்றன என்பதாக இல்லை மாறாக அவைகளை மனிதன்தான் இயக்குகிறான் ஆனால் அந்த இயக்கக்கூடிய மனிதர்களின் உள்ளத்தில் இந்த ஷைத்தானும் ஜின்களும் தீய எண்ணங்களை போடுவதன் மூலம் இழிவான விபச்சாரத்தையும், ஆபாசத்தையும் கேடுகெட்ட வாழ்க்கை முறையையும் இவைகள் பரப்புகின்றன எனவே ஜின்கள் மனதில் தீய எண்ணங்களை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பதை நாம் நம்முடைய சிந்தனையின் மூலமாக முன்வைத்துவிட்டோம்!

16

அறிந்துக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகளில் வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளங்கள் இருந்தால் அவைகளில் ஆபாசங்களை நீங்கள் கண்டு ரசித்தால் அவைகள் ஷைத்தான் மற்றும் ஜின்களின் தாக்கத்தால்தான் பார்க்கிறீர்கள் என்று கருதிக் கொள்ளுங்கள் உங்களால் வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளத்திற்கு தாயத்தை கட்டி தொங்க விட இயலுமா? அல்லது ஆபாசத்தை அறவே ஒழித்துக் கட்ட இயலுமா?

என்னுடைய கருத்தில் தவறு இருந்தால் உங்களால் குர்ஆன் ஹதீஸ்களின் படி கருத்து கூறுங்கள்! அல்லது சிந்திக்க முற்படுங்கள்!

18

இன்று எத்தனையோ தாயிக்கள் விபச்சாரத்தில் வழிதவறிவிட்டார்கள் இவர்களை வழிகெடுத்தது யார்? வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளங்களின் ஆபாச பேச்சுக்கள், காட்சிகள் தானே இது ஷைத்தானின் செயல்கள்தானே இப்போவாவது நம்புகிறீர்களா? ஷைத்தான் நம்மிடம் இணைவைப்பில் தோற்றுக் கொண்டு வருகிறான் ஆனால் வானொலிகள், தொலைக்காட்சிகள், கைபேசி, ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளங்கள் வாயிலாக ஆபாசத்தை பரப்பி நம் சமுதாயத்தவர்களை வழிகெடுத்து வருகிறான் இதைத்தான் குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது!

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏகஇறைவனை) மறுத்தோர் கூறுவார்கள். (குர்ஆன் 41:29)

இனி முடிவு உங்கள் கைகளில்!

20

ஷைத்தானும் அவனது ஜின் கூட்டத்தாரும் நம்மிடம் தோற்றுவிட்டானர் எனினும் ஷைத்தான் நம்மிடம் மீண்டும் மீண்டும் வருகிறான் அவன் இப்போது இணை வைப்புக்கு கீழ் உள்ள பாவங்களை தூண்டுகிறான் அந்த பாவங்களை தூண்டுவதன் மூலம் தன் எண்ணங்களில் வெற்றி பெற்று விடுகிறான் வாருங்கள் அவன் எவ்வகையில் நம்மிடம் வெற்றி பெறுகிறான் என்பதை அறிந்துக் கொள்வோமாக!

21

இவைகள் உங்கள் உள்ளத்தில் ஆபாசத்தை ஏற்படுத்தவில்லையா? ஷைத்தானும் அவனது ஜின் கூட்டத்தாரும் ஒளி ஒலியாக வந்து உங்கள் உள்ளத்தில் விபச்சாரத்தை தூண்டவில்லையா?

தயவு செய்து உங்கள் ஆத்மாக்களை அழித்துக் கொள்ளாதீர்கள்! நரகம் அந்த ஆத்மாக்களின் கூடாரமாக ஆகிவிட்டால் பின்னர் அதிலிருந்து விடுவிப்பது இயலாத காரியமாகும்!

தவ்ஹீத் என்னும் ஏக இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வாழ்க்கை நெறிமுறைகயை பேணி நம் ரூஹ் என்னும் ஆத்மாவை அல்லாஹ்வின் சந்நிதானாத்தில் சமர்ப்பிப்போமாக!

இறைவா! கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக!

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏

இறைவனேநீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாகமேலும்ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும்பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும்பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”.(அல்குர்ஆன் 26:83-85, 87)

 அல்லாஹு அக்பர்!

(அவன் மிகப் பெரியவன்)

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்

குறிப்பு

என்னில் தவறு நேர்ந்திருப்பின் தெளிவான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறோம்!

ஸலாம்!

1 thoughts on “ஜின்களின் கூட்டத்தினரே மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்!

  1. பிங்குபாக்: ஜின்கள் மனிதனின் உடலில் இறங்குவது சாத்தியமா? – இஸ்லாம் உங்கள் மார்க்கம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.